ரணில் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்தால் ஜனாதிபதி வேட்பு மனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ரணில் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்தால் ஜனாதிபதி வேட்பு மனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

 பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், "அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட ஒருவரை முன்வைக்கவில்லை. எந்த நேரத்திலும் சரியான நபரை முன்வைப்போம். 

எமது கட்சி பொஹொட்டுவ சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்கும்." கேள்வி - ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா? "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் பொஹொட்டு சின்னத்தில் முன்வைக்கப்படுகிறார். 

அவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி பொஹொட்டு உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ளலாம். அது நடந்தால் நாங்கள் பரிசீலிப்போம்." எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!