சம்பந்தனுக்கு இலங்கை தமிழரசு கட்சி யாழ்ப்பாண தலைமையகத்தில் அஞ்சலி!

#SriLanka #R. Sampanthan #Jaffna #IlankaThamilarasukKadsi
Mayoorikka
1 year ago
சம்பந்தனுக்கு இலங்கை தமிழரசு கட்சி யாழ்ப்பாண தலைமையகத்தில் அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இலங்கை தமிழரசு கட்சி யாழ்ப்பாண தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (02) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ர நிகழ்வில் அன்னாரின் உருவபடத்திற்கு ஈகைசுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. 

images/content-image/2024/07/1719977237.png

தொடர்ந்து சிரேஷ்ட உறுபினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அன்னாரது மறைவை தொடர்ந்து கட்சிகொடி அரைக்கம்பத்தில் பறக் கவிடப்பட்டதுடன் கறுப்பு கொடி, பனர்கள் கட்டப்பட்டு துயரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ்ப்பாண தொகுதி கிளையினரால் விசேட அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!