கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் : அதிபர், ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று (02.07) நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பாடசாலை நேரத்தின் பின்னர் பாடசாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட போதிலும், தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படாவிட்டால் பாடசாலை நேரத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்பிற்கு அழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் சம்பள முரண்பாடுகளை களையுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்புப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.



