மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
#Death
#Ranil wickremesinghe
#R.Sambanthan
#President
#condolence
Prasu
1 year ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆர். சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் குடும்பதினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ் ராசமாணிக்கம் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.