லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜூலை மாதத்திற்கான அதன் உள்நாட்டு எரிவாயு விலையை திருத்த முடியாது என்று லாஃப்ஸ் கூறுகிறது.  

தற்போது, ​​12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேவேளை, இன்று (02.07) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி, 12.5 கிலோ லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 

அதன்படி ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுடன் கூடுதலாக இந்த மாதமும் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மாதாந்த விலை திருத்தத்தின் பிரகாரம், லிட்ரோ எரிவாயுவின் விலையை இன்று குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும். 

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும். 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 694 ரூபாவாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!