கெஹலியவின் மனு மீதான தீர்மானம் இன்றும் ஒத்திவைப்பு!
#SriLanka
#Court Order
Mayoorikka
1 year ago

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுமா? இல்லையா? என்ற தீர்மானம் மற்றும் அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை அறிவித்துள்ளது.



