உங்கள் முடிவில் மாற்றம் வேண்டும்!

அன்பான தியாகி அறக்கட்டளை (TCT) உலகக் கொடையாளன் தியாகேந்திரா வாமதேவன் என்னும் தியாகி ஐயா அவர்களுக்கு!
நீங்கள் 50 வருடங்களாக உலகளாவிய ரீதியில் உங்கள் சொந்த உழைப்பையும் வியர்வையையும் தெரியாத சில பச்சோந்திகளுக்கோ, ஊடக வியாபாரிகளுக்கோ, விட்டில்களுக்கோ புரிய வாய்ப்பில்லை.
விசுவின் பட்டிமன்றத்தில் சபையில் வைத்தே 20 வருடங்களுக்கு முன்னர் 1 லட்சம் இந்திய ரூபாக்களை மேடையில் வைத்தே தேவையானவருக்கு கொடுத்து அதன் முறையை ஆரம்பித்து வைத்தவர் நீங்கள்.
அந்தவகையில் அதற்கு முன்னரும் பின்னரும் போர் நடக்கும் பொழுதும் பின்னரும் ஈழ, இந்திய, கென்யா, பங்ளாதேசம், சுவிஸ் என பல நாடுகளில் உங்கள் கொடைகளை வாரி வழங்கியவர் நீங்கள். இதை அறியாத சில வீடியோவுக்கு தம்முடைய மானத்தையும் விட்டு பணமே ஒரு நோக்காக கொண்ட பலர் அல்ல.
ஒரு சில யூட்டூப் வியாபாரிகள் உங்கள் சில சம்பவங்களை அனுமதி இன்றி எடுத்து போட்டு பணம் சம்பாதித்தார்கள். அதுதான் நீங்கள் அவர்களுக்கு போட்ட பிச்சை. அது ஒரு புறம் போக உங்களின் நடைமுறையில் உள்ள சிறுநீரக வியாதி, புற்றுநோய், 1000 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான மாதக் கொடுப்பனவு, தெல்லிப்பளை வைத்தியசாலை, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கான மாத உதவி தொழில் ஊக்குவிப்பு உதவி, ஈமைகிரிகை உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி, அவசர மருந்து உதவி, கலைஞர்களுக்கான உதவி, அகதி முகாம்களுக்கான உதவி, வீடு கட்ட உதவி, கோவில்களுக்கான உதவி இவற்றை நீங்கள் மக்கள் நன்மை கருதி தொடரவேண்டும். விமர்சக நஞ்சர்களால் மக்கள் பாதிப்படையக் கூடாது. இவ்வுதவியை வேறுயாரும் செய்ய முன்வரமாட்டார்கள்.
அது உங்களால் மட்டுமே முடியும். உங்களின் சேவைகளை 35 வருடங்களாக எனக்கு தெரியும் உங்கள் வலியும் வேதனையும் எனக்கு புரியும். தயவு செய்து உங்கள் சேவையை தொடந்து செய்யவேண்டும். அதற்கு நாம் பலர் ஆதரவாக இருபோம்.
முக்கிய குறிப்பு:
உதவி தேவைப்படுகின்ற மக்களுக்காக இச்செய்தியை மக்கள் நலன் கருதி லங்கா 4 ஊடகம் பிரசுரிக்கிறது.
மக்களில் அக்கறை உள்ளவர்கள் மக்களுக்கு தியாகி அறக்கட்டளையினுடைய உதவியை மீண்டும் கொடுப்பதற்கு ஆமோதிப்பவர்கள் இச்செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து TCT அறக்கட்டளையினுடைய சேவைகளை கொடைகளை உலகளாவிய ரீதியிலே முன்பை விட மேலும் விஸ்தரிப்பதற்கு தூண்ட வேண்டும்.
இந்த செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து இதன் ஊடாக மீண்டும் அந்த அறக்கட்டளுடைய சேவைகளை மீண்டும் தொடர வைப்பதற்காக உதவ வேண்டும்.
உங்கள் கருத்துக்கள் அல்லது விமர்சனங்களை எங்களுடைய முகநூலில் தெரிவிக்கலாம்.



