ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறையான திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.
இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தும் அதேவேளை, ஜனாதிபதி வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதில் எந்தவொரு ஒப்பந்தமும் வேலைத்திட்டமும் மறைக்கப்பட்டதல்ல.
ஜனாதிபதி சகல தகவல்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்தப் பின்னணியில், இந்த உருவாக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தைத் தவிர்த்து எவராலும் அரசாங்கத்தை நடத்த முடியாது.
இந்தப் பொருளாதாரத் திட்டத்திற்குப் புறம்பாக யாராவது ஆட்சி செய்ய வேண்டும் என்று கனவு கண்டால், நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என்பதைக் கூற வேண்டும் என்றார்.



