காதலிக்கு பிறந்த நாள் பரிசு வாங்க 14 வயது காதலன் செய்த காரியம்!

#SriLanka #Love
Mayoorikka
1 year ago
காதலிக்கு பிறந்த நாள் பரிசு வாங்க 14 வயது காதலன் செய்த காரியம்!

தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை வாங்குவதற்காக விகாரைக்கு சொந்தமான காணிக்கை பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கொழும்பு 07, பௌத்தாலோக மகா விகாரைக்கு சொந்தமான காணிக்கை பணத்திலிருந்து குறித்த மாணவர் 130 ரூபாவை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவ்வாறு கைது செய்யப்பட்ட பொரளையை சேர்ந்த 14 வயது மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

 காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டையை வழங்குவதற்காக 130 ரூபாவை திருடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரான மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் காதலி என கூறப்படும் சிறுமியின் தொலைபேசி இலக்கத்திற்கு பொலிஸார் அழைப்பு எடுத்த நிலையில் உண்மை கண்டறியப்பட்டதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!