குடித்துவிட்டு ரயிலை ஓட்டிய சாரதி கைது : பதற்றத்தில் பயணிகள்!

கடமையின்போது மது அருந்திவிட்டு புகையிரதத்தை ஓட்டிச்சென்று பதற்ற நிலையை தோற்றுவித்த ரயில் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி முற்பகல் 10.40 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி ஓடத் தொடங்கிய புகையிரதத்தின் சாரதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பதட்டமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி நகருக்கு அருகில் உள்ள சுடுஹும்பொல என்ற இடத்தில் ரயிலை நிறுத்தி விட்டு ரயிலில் இருந்து தப்பி ஓடிய போது, ரயிலில் இருந்த பயணிகள் அவரை துரத்திச் சென்று பிடித்து, உதவி ஓட்டுநரை ஈடுபடுத்தி ரயில் கண்டி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், குடிபோதையில் வாகனம் ஓட்டியவரை ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் மூலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த ரயில் மதியம் 1.40 மணிக்கு கண்டியை வந்தடையும். ஆனால் மதியம் 2.30 மணிக்கு ரயில் வந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.



