கெஹலிய ரம்புக்வெல்லவின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கெஹலிய ரம்புக்வெல்லவின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஜூலை 1 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனு இன்று (27.06) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் உண்மைகளை முன்வைத்தார்.

தரமற்ற ஆன்டிபாடி தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை செல்லுபடியாகாது என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!