மூதூரில் தமிழ் மக்களுக்கெதிராக அரங்கேறும் அராஜகங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
#SriLanka
#Trincomalee
Mayoorikka
1 year ago

திருகோணமலை மூதூர் மதுபானசாலைக்கு எதிராகப் போராட்டம் நடாத்திய மக்கள் மீது இரவோடிரவாகத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மூதூர்ப் பொலீசார் இரவு வேளைகளில் திட்டமிட்டு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இரவுவேளை என்பதால் ஆதாரமின்றி முறைகேடுகளில் ஈடுபடுவதும் அச்சுறுத்துவதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட மனித உரிமை மீறலாகும்.
தமிழ் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
சம்பந்தப்பட்ட மதுபானசாலை மூடப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



