நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக இழுவை படகு மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குழுவை கைது செய்ய சென்ற போது ஏற்பட்ட சம்பவத்தில் கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.