போரில் சிக்கி மாயமான 21000 குழந்தைகள் : சேவ் தி சில்ட்ரன் அமைப்பு விடுத்த கோரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
போரில் சிக்கி மாயமான 21000 குழந்தைகள் :  சேவ் தி சில்ட்ரன் அமைப்பு விடுத்த கோரிக்கை!

காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.  

4,000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. 

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். 

காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரைப் பிரிந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை. யுத்தத்தின் போது இழந்த பிள்ளைகளை அவர்களது பெற்றோருடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சேவ் த சில்ட்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

எவ்வாறாயினும், மோதல்கள் அதிகரித்து வருவதனால் இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர, இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகளும் கணிசமான அளவில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 

சேவ் தி சில்ரன் அறிக்கையின்படி, 33 இஸ்ரேலிய குழந்தைகளும் மோதலில் இறந்துள்ளனர். காஸா பகுதியில் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸால் கடத்தப்பட்ட ஏனைய இஸ்ரேலிய சிறுவர்களும் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4