மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து : 12 பேர் வைத்தியசாலையில்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பெலவத்தை - நெலுவ வீதியின் யட்டபாத பிரதேசத்தில் பயணிகள் போக்குவரத்து தனியார் பஸ் ஒன்று கல்வெட்டு உள்ள இடத்திலிருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பெரிய மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (22.06) இடம்பெற்றுள்ளது.
விபத்தின் காரணமாக பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தில் பயணித்த சுமார் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.