இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டாம்: ஜனாதிபதி
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago

நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும்
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லாமல், புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.



