திருகோணமலையில் அனுமதியற்ற வீதியோர கடைகளை அகற்ற திட்டம்

திருகோணமலை நகரசபை எல்லை மற்றும் பிரதேச சபைக்கு உட்பட்ட அனுமதியற்ற வீதி ஓரங்களில் காணப்படும் கடைகளை அகற்றி தருமாறு திருகோணமலை அநுராதபுர சந்தி பொதுச் சந்தை வியாபாரிகள், மரக்கறி பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் பேருந்து தரிப்பிட வியாபாரிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு முன்னாலும் , திருகோணமலை நகரசபை வளாகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக உப்புவெளி பிரதேச சபை செயலாளர், உப்புவெளி காவல் நிலைய பொருப்பதிகாரி, தலைமை காவல் நிலைய போக்குவரத்து உத்தியோகத்தர் மற்றும் திருகோணமலை நகரசபை செயலாளர் உள்ளடங்களாக வியாபாரிகள் 15 பேர்களுடன் கலந்துரையாடல் திருகோணமலை நகரசபையில் இடம் பெற்றது.
கலந்துரையாடலில் அனுமதியற்ற வீதிக் கடைகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் இதற்காக தனியான குழு ஒன்றினை அமைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



