சிறுவர்களுக்கான சிறந்த நாடு உருவாக்கப்படும் - ரணில்!

அடுத்த 5-10 வருடங்களில் சிறுவர்களுக்கான சிறந்த நாடு உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்தவொரு குழந்தையும் துன்பப்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் தரம் முதல் உயர்தரம் வரையான 100,000 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் அரலியகஹா மன்றில் இடம்பெற்றது.
இதி்ல் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்படி கூறியுள்ளார். மேலும் தெரிவித்த அவர், "2022 - 2023 எங்கள் அனைவருக்கும் கடினமான காலம். நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். சில சமயங்களில் சாப்பாடு இல்லாமல் போனோம்.
சில சமயங்களில் பள்ளிக்கு செல்ல பஸ், கார் இல்லை. இப்போது அந்த நேரம் முடிந்துவிட்டது. 2024ஆம் ஆண்டுக்குள் நாடு திவாலாகிவிடும் என்றார்கள். தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.
பலருக்கு அவர்கள் வாழ்ந்த நிலத்தின் மீது உரிமை இல்லை” எனக் கூறியுள்ளார்.



