வவுனியாவில் மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வவுனியாவில் மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்(DCDB) இன்று (20.06) காலை மீட்கப்பட்டுள்ளதுடன், அதேபகுதியை சேர்ந்த 30வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

 மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும் சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்,

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) சாமந்த விஜயசேகர அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்(SSP) மாலின் அஜந்த பெரேரா அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்(DCDB) பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதர் அழகியவண்ண அவர்களின் தலமையிலான பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன், பொலிஸ் சார்ஜன்டுகளான 6158 ரன்வெல, 44736 சிசிற, ஆகியோருடன் இணைந்து பொலிஸ் கொன்ஸ்தாபிள்கள் 78448 வீரசேன(சிந்தக்க), 34712 ஹேரத், 28752 சுப்புன், 25523 சனத், 20569 குமார, 95991 நாமல், மற்றும் பொலி்ஸ் கொன்ஸ்தாபிள் சாரதியான 18129 திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே (DCDB) சூழ்ச்சுமமாக செயல்பட்டு குறித்த மரங்களை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைதுசெய்துருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!