இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

உத்தியோகபூர்வ விஜயத்திற்காக, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெயசங்கர் நாளை (20.06) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



