மது அருந்தி கார் ஓட்டியதாக பிரபல அமெரிக்க பாடகர் கைது

#Arrest #America #Alcohol #Singer
Prasu
2 years ago
மது அருந்தி கார் ஓட்டியதாக பிரபல அமெரிக்க பாடகர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மதுபோதையில் கார் ஓட்டியதாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஃப்போல்க் கவுன்ட்டி மாவட்ட அட்டார்னி அலுவலகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

டிம்பர்லேக் தி சோசியல் நெட்வொர்க் மற்றும் பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

பாடகர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான கிராமிய விருதுகளை 10 முறை வென்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் தனது புதிய ஆல்பமான எவ்ரிதிங் ஐ தாட் இட் வாஸ் (Everything I Thought It Was) வெளியிட்டார்.

இதை பிரபலப்படுத்தும் வகையில் "Forget Tomorrow" என்ற பெயரில் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஜஸ்டின் டிம்பர்லேக் அடுத்த வாரம் சிகாகோவின் யுனைடெட் சென்டர் மற்றும் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் தலா இரண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

 ஜூலை 9-ந்தேதி வடஅமெரிக்காவின் கென்டக்கியில் தனது பயணத்தை முடித்து, மாத இறுதியில் ஐரோப்பியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4