நுவரெலியா பொரலந்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிசு
#SriLanka
#Death
#Police
#NuwaraEliya
#Body
#Baby_Born
Prasu
1 year ago

நுவரெலியா பொரலந்தவில் கால்வாய் ஒன்றிற்கு அருகில் இன்று (13) சிசு ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது சில நாட்களுக்கு முன்னர் பிறந்த சிசு எனவும், இடுப்பில் இருந்து கீழ் பகுதி இல்லாத நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, உயிரிழந்த சிசுவின் பெற்றோரை தேடும் நடவடிக்கைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நுவரெலியா பதில் நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.



