களுத்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிய வஸ்கடுவ கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு 119க்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (13) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 05 அடி 02 அங்குல உயரம் கொண்ட மெலிந்த நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலைமுடி சுமார் 04 அங்குலமாக வளர்ந்துள்ளதாகவும், மேல் உடலில் பழுப்பு நிற சட்டை (T-shirt) அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.