நீண்ட நீரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பு!

#Health #work
Mayoorikka
1 month ago
நீண்ட நீரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பு!

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கைமுறைக்குள் தள்ளிவிட்டது. நீண்ட நீரம் உட்கார்ந்த வாழ்க்கைமுறையானது நம் உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க ஒரே வழி அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவதாகும். போதுமான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புக்ளை எதிர்த்துப் போராட அவசியமாகும். 

ஆனால் உடல் செயல்பாடுகளுக்கு எத்தனை மணி நேரம் ஒதுக்க வேண்டும், எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் அல்லது உட்கார வேண்டும்? ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு இந்த முக்கிய கேள்விகளுக்கானப் பதிலைக் கொண்டுள்ளது.

 சிறந்த ஆரோக்கியத்திற்கு, ஒருவரின் நாளானது குறைந்தது எட்டு மணிநேர தூக்கம், மிதமான அல்லது தீவிரமான பயிற்சிகளை உள்ளடக்கிய நான்கு மணிநேர உடல் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 

மிதமான செயல்பாடு என்பது வேலைகளைச் செய்வதிலிருந்து இரவு உணவு தயாரிப்பது வரை இருக்கலாம், அதேசமயம் மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சியானது விறுவிறுப்பான நடை அல்லது ஜிம் பயிற்சி போன்ற இயக்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.