சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவையை 06 மாதங்களுக்கு நீட்டிக்க பரிந்துரை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவையை 06 மாதங்களுக்கு நீட்டிக்க பரிந்துரை!

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவையை 06 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையின் அங்கீகாரத்தை அரசியலமைப்பு சபை ஒத்திவைத்துள்ளது. 

இதுதொடர்பான பிரேரணை நேற்று (10.06) கூடிய அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக் காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சேவையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

 குறித்த பிரேரணைக்கு அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் எனவும், அதற்கான அங்கீகாரம் முன்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், எதிர்வரும் 18ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடவுள்ளதுடன், சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!