உதவி செய்தமைக்கு கைமாறாக 02 கோடி பெறுமதியான பொருளை திருடிய குடும்பம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இரத்தினபுரி, முதுவ பிரதேசத்தில் இரத்தினக்கல் வியாபாரி ஒருவரின் வீட்டில் இரண்டரை கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இரத்தினக்கல்லை திருடிய சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் தந்தையும் மற்றும் 12 வயது ஆண் குழந்தையும் இணைந்து இந்தத் திருட்டைச் செய்துள்ளனர்.
குறித்த வர்த்தகர் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த குடும்பத்தை அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு உணவும் பானமும் வழங்கியுள்ளார்.



