பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை பொலிஸார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை பொலிஸார்!

வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்தில் இயங்கி வரும் அமைப்பொன்றில் பணியாற்றிய சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

குறித்த நிறுவனத்தில் இங்கிலாந்து, போலந்து போன்ற வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு பிரதேசங்களில் மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த பண மோசடி தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​அவர் இது தொடர்பான பண மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் உரிமையாளர் என தெரியவந்துள்ளது.  

சந்தேக நபரின் வீட்டு முகவரி அல்லது வேறு அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.  

பொலிஸ் அத்தியட்சகர் / மிரிஹான - 071 8591 643 நிலைய கட்டளைத் தளபதி / மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு - 071 8137 373 சந்தேக நபரின் புகைப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!