உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் திறன் விருத்தி வகுப்பறையை சஜித் பிரேமதாஸ திறந்து வைத்தார்!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் திறன் வகுப்பறையை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவால் சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறையில் சுமார் தொலைக்காட்சி மற்றும் 5 கணனிகளை கொண்ட திறன் வகுப்பறையே சற்று முன்னர் இலங்கை எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைப்பதற்க்காக வருகை தந்த இலங்கை எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினருக்கு வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசை அணிவகுப்புடன் வரவேற்க்கப்பட்டனர்.
கல்லூரி அதிபர் திருமதி ராஜலக்ஸ்மி சுப்பிரமணிய குருக்கள் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம் ஏ சுமந்திரன் ,ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் உமா சந்திரா பிரகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் அமைப்பாளர் தொழிலதிபர் கிருபாகரன், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் மு.சதாசிவம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இத் திட்டத்தின் கீழ் திறன் தொலைக்காட்சி, 5 கணனிகள் என்பன வழங்கப்பட்டிருந்ததமை குறிப்பிட தக்கது.



