கைவிடப்பட்ட ரயில்வே சாரதிகளின் வேலை நிறுத்த போராட்டம்!
#SriLanka
#strike
#Train
Mayoorikka
1 year ago

போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



