கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலையின் திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைத்த சஜித் பிரேமதாஸ

#SriLanka #School #Sajith Premadasa
Lanka4
1 year ago
கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலையின் திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைத்த சஜித் பிரேமதாஸ

யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறை இலங்கை எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைப்பதற்க்காக வருகை தந்த இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினருக்கு வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டனர்.

images/content-image/2024/06/1718012936.jpg

பாடசாலை அதிபர் அ.பவானந்தன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் உமா சந்திரா பிரகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் அமைப்பாளர் தொழிலதிபர் கிருபாகரன், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் மு.சதாசிவம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

images/content-image/2024/06/1718012953.jpg

இத் திட்டத்தின் கீழ் திறன் விருத்தி தொலைக்காட்சி, 5 கணனிகள் என்பன வழங்கப்பட்டிருந்ததமை குறிப்பிட தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!