பாடசாலை மாணவர்கள் சென்ற வான் மீது விழுந்த மரம் : ஐவர் வைத்தியசாலையில்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பாடசாலை மாணவர்கள் சென்ற வான் மீது விழுந்த மரம் : ஐவர் வைத்தியசாலையில்!

கண்டி – திகன வீதியின் கெங்கல்ல பிரதேசத்தில் அழுகிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 6:00 மணியளவில் கெங்கல்ல பிரதேசத்தில் வீதிக்கு அருகாமையில் உள்ள வெறிச்சோடிய காணியில் அழிந்து கொண்டிருந்த சீயாலா மரம் ஒன்று வீதியில் விழுந்துள்ளது.  

இதன்போது திகனவில் இருந்து கண்டி நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று பயணித்த நிலையில் குறித்த மரம் வேனின் மீது விழுந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கோபுரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் 05 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த  மரத்தை அகற்றுமாறு காணியின் உரிமையாளருக்கும், பல அரச நிறுவனங்களுக்கும் அறிவித்த போதும் அவர்கள் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என அயலவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!