கல்முனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கல்முனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு!

2024ம் ஆண்டின் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்புத்தினம் முன்னிட்டு புகைத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வலுவான தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு கருத்தரங்கு கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.  

குறித்த நிகழ்வானது தலைமைப்பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம் .சாலிஹ் தலைமையில் நடைபெற்றதுடன் இதன் போது பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக மகா சங்க சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் நைனா முஹம்மது நௌசாட் பிரதான வளவாளராக கலந்துகொண்டு மக்களுக்கு சிறந்த விளக்கங்களை வழங்கியிருந்தார்.  

அத்துடன் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று சமுர்த்தி வங்கி வலயங்களில் கல்முனை சமுர்த்தி வங்கி வலயம் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி வாரத்தில் அதிகபடியான கொடி விற்பனை செய்து முதலாம் இடத்தை பெற்று கொண்டவர்கள் உள்ளிட்ட வங்கி முகாமையாளர் , பிரதி முகாமையாளர், உத்தியோகத்தர்கள், அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!