பாடையில் ஏற்றப்பட்ட பல்கலைக்கழக பட்டம் : இலங்கையில் பட்டதாரிகளின் நிலைமை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பாடையில் ஏற்றப்பட்ட பல்கலைக்கழக பட்டம் : இலங்கையில் பட்டதாரிகளின் நிலைமை!

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் இன்று  (09.06) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

போராட்டத்தில் கலந்துகொண்டோர்,பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, படிப்பிற்கும் போராட்டம், வேலைக்கும் போராடுவதா, படித்ததற்கு கூலித்தொழிலா கடைசி வரைக்கும், படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா? படித்தும் பரதேசிகளாக திரிவதா? என கோஷங்கள் எழுப்பியுள்ளனர். 

மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!