2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதுவும் சமர்ப்பிக்கப்படாது!

2025ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் எதுவும் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்றும், அந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் இடைக்கால நியமக் கணக்கின் ஊடாக செலவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2025 மார்ச் இறுதி வரை இடைக்கால நிலையான கணக்கு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாட்காட்டியின் பிரகாரம் இந்த வருடம் தேர்தல் ஆண்டாகும் எனவும், வருட இறுதியில் தேசிய அளவிலான தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் இவ்வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படாது எனவும், புதிய அரசாங்கத்திற்கு தமது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.



