கிளிநொச்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு!

போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று (09.06) இடம்பெற்றது.
போதையற்ற இலங்கையை கட்டி எழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வரும் போதைப் பொருளுக்கு எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் அச்சிடும் நிகழ்வு கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் அதிகமாக மக்கள் பாவனை உள்ள இடங்களில் முச்சக்கர வண்டிகள் சென்று வருகின்றமைனால் அதிகமான மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும்.
உங்கள் அருகில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை இனம் கண்டால் உடனடியாக 107 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு பொலிஸ் தகவலை பரிமாறும் போது விற்பனை செய்யும் முகவர்களை தடுத்து போதையற்ற பிரதேசமாக, மாவட்டமாக, நாடாக மாற்றலாம்.



