தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ள டிரம்ப்

#Court Order #America #Newyork #Trump
Prasu
2 years ago
தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ள டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் இருந்த ரகசிய உறவவை மறைக்க ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு 1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. 

இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து அவர் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறையாகும்.

இந்நிலையில் நேற்று தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த மோசடியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். 

தான் நிரபராதி என நிரூபிக்க முக்கியமான சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வர அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான தண்டனை விபரங்கள் வரும் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4