நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் பெண்ணொருவரும் ஆணும் உயிரிழந்துள்ளனர்.  

மணனா புலத்சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 76 வயதுடைய பெண்ணும், ஹகொட, புஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

ஹொரணையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று ஹொரண புலத்சிங்கள வீதியில் பல்லாபிட்டிய சந்திக்கு அருகில் பயணிகளை இறக்கி விட்டு வீதிக்கு திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மற்றைய விபத்து தொடங்கொட, தெலிக்கடை பகுதியில் வக்வெல்லவில் இருந்து தொடங்கொட நோக்கி பயணித்த இராணுவ ட்ரக் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மற்றைய விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த இந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேருந்து மற்றும் பாரவூர்தியின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!