கிளிநொச்சியில் பயிர்ச் சிகிச்சை முகாம்!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
1 year ago

கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாயிகளின் நலன் கருதி பயிர்ச்சிகிச்சை முகாம் ஆரம்பமானது.
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்ச்செய்கையின் போது எதிர்கொள்ளும் நோய்த்தாக்கத்தை குறைக்கும் நோக்கில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயிர்ச்சிகிச்சை முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாதத்தில் இரண்டாவது வாரத்தின் செவ்வாய்க்கிழமையும் அதே மாதத்தில் இறுதி வாரத்தின் வெள்ளிக்கிழமையும் குறித்த பியிர்சிகிச்சை முகாம் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கையின் போது பயிர்களின் நோய் நிலைமைகளை நேரடியாக காண்பித்து கட்டுப்படுத்தல் முறைகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.



