சுமந்திரனுக்கு பயப்படுகின்றாரா சிறிதரன்? என்னதான் நடக்கின்றது தமிழரசுக் கட்சிக்குள்

#SriLanka #IlankaThamilarasukKadsi
Mayoorikka
1 year ago
சுமந்திரனுக்கு பயப்படுகின்றாரா சிறிதரன்? என்னதான் நடக்கின்றது தமிழரசுக் கட்சிக்குள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, முடியாமல் போனதால் கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம் தனது தோல்விக்கு பழிவாங்க கட்சிக்குள் தோற்றுப்போன சுமந்திரன் தரப்பு அண்மைக்காலமாக முன்னெடுத்து வரும் காய்நகர்த்தல்கள் யாவரும் அறிந்த விடயமே.

 இருந்தும் அண்மைக்காலமாக தமிழரசு கட்சிக்குள்ளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற புதிய பிரச்சனைதான் என்ன? ஏன்   சுமந்திரனுக்கு சிறிதரன் பயப்படுகிறார் என்று பலவாறாக பல தரப்பு ஊடகங்களும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றன ஏன் தமிழரசு கட்சிக்குள்ளேயே இரண்டு பிரிவுகளாக சுமந்திரன் பிரிவு மற்றும் சிறிதரன் பிரிவென இரு பிரிவுகளாக நின்று அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 தமிழரசு கட்சி தாண்டி  மற்ற கட்சிகள் கூட ஓரளவு தங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டதன் பிற்பாடு கூட தமிழரசு கட்சிக்குள்ளே சுமந்திரனுடைய அணி சிறிதரனுடைய அணி என்று இரண்டு பிரிவுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறன, தமிழரசுக் கட்சியினுடைய தலைவர் பதவியில் சிறிதரன் தேர்வு செய்யப்பட்டு இருந்ததன் பிற்பாடு கூட இந்த போர் மேலும் எண்ணெய் ஊற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

 இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் தமிழரசு கட்சியில் சிறிதரன் அணியிலே இருக்கின்ற தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களும்,   சுமந்திரனுக்கு ஆதரவாக இருக்கின்ற தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களும் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை இருந்தாலும் இவர்களுடைய தொண்டர்களும் உறுப்பினர்களும் இவர்களுக்கு சார்பாக இருப்பவர்களும் தான் இதை தூண்டி விடுகிறார்கள் என்ற ஒரு கருத்தும் உலாவி வருகிறது.

நடந்து கொண்டிருக்கின்ற விடயத்தை பார்க்கின்ற பொழுது இந்த விடயத்திலே சுமந்திரனுக்கு சிறிதரன் ஏதோ பயப்படுவது போலவும் தோற்றமளிக்கிறது. அதையும் ஒரு  சில ஊடகங்கள்  மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறது. இருந்தாலும் கூட எதற்காக சிறிதரன் பயப்படுகிறார் என்ற ஒரு கேள்விக்குறி பெரிதாகிக் கொண்டிருக்கிறது.

 பயப்படுகின்ற காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது பல ஊடகங்கள். அதேபோல சிறிதரனுடைய பிரச்சனைகள் என்று கூறப்படுகின்ற சில கருத்து கூறல்கள் மற்றும் சிறிதரன் கூறிய சில விடயங்கள் இவற்றை சுமந்திரன் விமர்சிப்பதும் அதேபோல சிறிதரனுடைய பக்கத்தில் இருக்கின்ற சிலரும் அவருடைய ஆதரவாளர்களும் சுமந்திரனுடைய எதிர்மையான பேச்சுக்கள் மற்றும் அவரால் கூறப்பட்ட விடயங்கள் தேசியத்துக்கு முரணானவர் என்று கூறப்படுகிறது. 

 எது எப்படி இருந்தாலும் தமிழரசு கட்சி என்பது பாரம்பரிய ஒரு தமிழ் கட்சியாக இருந்திருக்கிறது அதை போராட்ட காலங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கூட முன்னுரிமை கொடுத்து அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளே தலைமை தாங்க வைத்தார். 

 இருந்தும் அப்படியான ஒரு கட்சி தமிழர்கள் நம்பி இருக்கின்ற கட்சி தமிழர்களுடைய பாரம்பரிய கட்சியாக உள்ள ஒரு கட்சி இப்படி தமிழர்களுடைய நன்மை அல்லது தமிழர்களின் எதிர்கால நலனில் அக்கறையில்லாமல்  அடிபட்டுக் கொண்டிருப்பவர்கள் எப்படி தமிழர்களை காப்பார்கள் உரிமைகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்ற ஒரு கேள்வி இருக்கிறது.

 அதேபோல பெரிய ஒரு கேள்வியாக எதற்காக சிறிதரன் சுமந்திரனுக்கு பயப்படுகிறார் என்ற ஒரு கேள்விக்குறி இருக்கிறது. இதற்கான பதிலை  சுமந்திரனும் சிறிதரனும் தான் கூற வேண்டும்.

 இதற்கான ஒரு சில பதில்கள் சில ஆதாரங்கள் லங்கா 4 ஊடகத்தில் இருந்தாலும் கட்சியினுடைய வருங்காலத்தையும் தமிழ் மக்களுடைய வருங்காலத்தையும் நாங்கள் கருத்தில் கொண்டு  அதனை வெளியிட விரும்பவில்லை இருந்தாலும் இதற்கான ஒரு சில முக்கிய காரணங்கள் மறைமுகமாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. 

 எவ்வாறாக இருந்தாலும் இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணாது கௌரவப் பிரச்சினையாக, இரு அணிகளின் பிரச்சினையாக மாற்றினால் தந்தை செல்வா சொன்னதைச் சற்று மாற்றி ‘இலங்கை தமிழரசுக் கட்சியை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறவே நேரிடும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!