செங்கடலில் ஈரானிய கப்பலை தாக்கிய ஹவுதி

#Attack #Iran #Ship #Houthi #RedSea
Prasu
2 years ago
செங்கடலில் ஈரானிய கப்பலை தாக்கிய ஹவுதி

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமன் நாட்டியில் செயல்பட்டு வரும் ஹவுதி குழு செயல்பட்டு வருகிறது.

இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஹவுதி குழுவினருக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் ஏவுகணைகள் மூலம் ஹவுதி தனது தாக்குலை தொடர்கிறது.

கீரிஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற கப்பல் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பல் சேதமாகி, தண்ணீர் கப்பலுக்குள் சென்றது. 

ஆனால், கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை. இந்த நிலையில் லாக்ஸ் என்ற தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஈரானுக்கு தானியங்கள் ஏற்றி சென்றது எனத் தெரியவந்துள்ளது. 

கப்பல் முழுவதும் தானியங்கள் நிரம்பியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4