மன்னாரில் கடல் ஆமை இறைச்சிகளுடன் இருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மன்னாரில் கடல் ஆமை இறைச்சிகளுடன் இருவர் கைது!

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் இன்று (30.05) கைது செய்யப்பட்டுள்ளனர். 

பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.  

இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  

மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில் குறித்த கடலாமை பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!