ஒருவழியாக தனது இலக்கை அடைந்த இலங்கை : குவிந்த முதலீடுகள்’!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

2024ஆம் ஆண்டிற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு இலக்கை இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே இலங்கை முதலீட்டுச் சபை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
முதலீட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் தமது வர்த்தகத்தை தொடர்வதற்காக நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அதானி நிறுவனம் ஏற்கனவே முதலீட்டு சபையுடன் 820 மில்லியன் டொலர் முதலீட்டிற்கும் ஏனைய வர்த்தக நிறுவனங்களுக்கு மேலும் 320 மில்லியன் டொலர்களுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



