கிழக்கு லண்டனில் உள்ள பிரபலமான உணவகம் அருகே துப்பாக்கி பிரயோகம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கிழக்கு லண்டனில் உள்ள உணவகம் அருகே குழந்தை உள்பட நால்வர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், ஏனைய 03 பேரின் நிலை குறித்து அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட்டில் நேற்று (29.05) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதிக்கு பெருநகர காவல்துறையின் உடனடியாக விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.