இந்திய கப்பலை கைது செய்த இலங்கை கடல்சார் சுற்றாடல் சபை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போது எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் கப்பலை கைது செய்துள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ், குறித்த சம்பவத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் பழுதுபார்ப்பதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்தது.
குறித்த கப்பலில் இருந்தே ஹைட்ராலிக் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.