தலை மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

#SriLanka #Mannar #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
தலை மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இரங்கல் திருப்பலி தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் இன்று (18.05) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டது.  

அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு,இறந்த உறவுகளுக்காக மலர் அஞ்சலியும் இடம் பெற்றது.  

images/content-image/1716033291.jpg

இரங்கல் திருப்பலியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. 

இதன் போது தென் பகுதியில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு சுற்றுலா வந்த சிங்கள மக்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து தெளிவு படுத்த பட்ட நிலையில் அவர்களும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை பெற்றுக்கொண்டனர். 

images/content-image/1716033327.jpg

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரங்கல் திருப்பலி மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வை ஆலய அருட்பணி பேரவை,மற்றும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!