பரீட்சை நிலையத்திற்கு வருகைதந்த இரு மாணவிகள் மாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பரீட்சை நிலையத்திற்கு வருகைதந்த இரு மாணவிகள் மாயம்!

அபோசா கல்விப் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு வந்த இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்குச் செல்லவில்லை என அவர்களது பாதுகாவலர்களால் கினிகத்தேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு வந்துள்ளனர்.

மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கினிகத்தேன, அக்ரோயா மற்றும் நாவலப்பிட்டி நாகஸ்தான பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவர்களும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது.

பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஒருசில மாணவர்கள் பார்த்துள்ளனர்.

காணாமல் போன மாணவர்களின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!