மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று (13.05) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாணந்த குருக்கள் தலைமையில் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரையான சுப நேரத்தில் கொடியேற்றம் இடம் பெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு முன் எழுந் தருளியதை தொடர்ந்து விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து கொடிக் கம்பத்திற்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து கொடியேற்றும் விழாவில் இடம்பெற்றது.
இதன் போது கொடியேற்ற பெரு விழாவில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



