புதிய கட்சியை ஆரம்பிக்கும் சிறிதரன்! எதிர்க்கும் புலம்பெயர் அமைப்புக்கள்

தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சிறிதரன் கட்சி ஆரம்பிப்பதற்கு ஒரு சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிலிருந்து எதிர்ப்பு கிளம்புவதாகவும் தெரியவந்துள்ளது.
சுமந்திரன் மீது தவறான கண்ணோட்டத்தில் உள்ள சில புலம்பெயர் அமைப்புக்கள் சிறிதரன் கட்சியிலிந்து விலகினால் தமிழரசுக் கட்சி உடைந்து சுமந்திரன் கட்சியை கையகப்படுத்தி விடுவார் என்ற அச்சம் காரணமாக சிறிதரனையே தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியில் வைத்திருப்பதற்காக விரும்புகின்றன.
இதேநேரம் சுமந்திரன் கட்சியை கையகப்படுத்தினால் அது சிங்கள கட்சியாக மாறி விடும் என்ற அச்சமும் குறித்த புலம்பெயர் அமைப்புகளிடம் காணப்படுகின்றது. இந்த நிலையில் கட்சியின் பாதுகாப்பிற்காகவும் கட்சியை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தவும் சிறிதரனை ஊன்றுகோளாக வைக்க முயல்கின்றன.
இதனிடையே சுமந்திரன் தமிழ்மக்களுக்கான தீர்வினை சட்ட ரீதியாகவும் சர்வதேசத்துடனும் இணைந்து இராஜதந்திர ரீதியில் பெற்றுக் கொடுப்பதாகவும் கூறி வருகின்றார்.
இதேவேளை சிறிதரனுக்கு சுமந்திரனுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விருப்பமின்மை காரணமாக தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்தும் தலைமை பதவியில் இருப்பதற்கு விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிதரனை பொறுத்தவரையில் தான் ஒரு புதிய கட்சி ஆரம்பிப்பதன் மூலம் தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யலாம் என கருதுகின்றார். அதற்கு தானே கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் எனவும் அதற்காக தானே தொடர்ந்தும் ஒரு கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு அவர் விரும்புகின்றார்.
இதனிடையே தலைவர் பதவியில் இருந்தால் மாத்திரமே மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதை இவர் சொல்ல வருகின்றாரா என்ற கேள்வியும் ஒரு சிலரிடம் எழுகின்றது.
அதும் மட்டுமன்றி தலைவர் பதவியில் இல்லாது தனியாக உறுப்பினர் பதவியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியாதா? தலைவர் பதவியில் இல்லாத எனைவயவர்கள் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையா? அல்லது இவ்வளவு காலமும் இவர் மக்களுக்கு சேவை செய்ய வில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது?
இந்த நிலையில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் உள் வட்டக் கலந்துரையாடல்களிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். இதற்காக சில புலம்பெயர் முதலீட்டாளர்களின் உதவியை நாடி பணம் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கட்சியை பாதுகாப்பதற்காக ஒரு சில புலம்பெயர் அமைப்புக்கள் சிறிதரனையே தமிழரசுக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் வைத்திருக்க முயல்கின்றன.



