போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வழக்கில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
#SriLanka
Mayoorikka
1 year ago

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
பெளத்த தர்மம் உள்ளிட்ட பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தின் கீழ் வழக்கு தொடர உத்தரவிடுமாறு கோரி அனைத்து மதத் தலைவர்களாலும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



