பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த தமிழர்கள்!

#SriLanka #NorthernProvince #Vavuniya #sports
Mayoorikka
1 year ago
பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த தமிழர்கள்!

வட மாகாண ரீதியிலான 2024 ஆம் ஆண்டுக்கான பளு தூக்கல் போட்டியில் பங்குபற்றி வவுனியா மாவட்ட வீர வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.

 யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (12.05.2024) இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் வவுனியா மாவட்டம் இரண்டாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது. குறித்த போட்டியில் P.மேரி அசமிதா 49kg எடைப்பிரிவில் 90kg தூக்கி 1ஆம் இடத்தினையும், S.நிதர்சினி 59kg எடைப்பிரிவில் 85kg தூக்கி 1ஆம் இடத்தினையும், அம்பிகா 64kg எடைப்பிரிவில் 85kg தூக்கி 2 ஆம் இடத்தினையும், N.சுஸ்பிதாகினி 71kg எடைப்பிரிவில் 95kg தூக்கி 2 ஆம் இடத்தினையும், Pஅஜந்தா 55kg எடைப்பிரிவில் 56kg தூக்கி 3 ஆம் இடத்தினையும், அபிஸாலினி 89 kg எடைப்பிரிவில் 75 kg தூக்கி 3ஆம் இடத்தினையும், ஆண்கள் பிரிவில் கோகுலன் தனுசிகன் 3ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்கள்.

images/content-image/2024/05/1715580163.jpg

 வவுனியா மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி அமலனின் ஒழுங்குபடுத்தலில் வடமாகாண ரீதியில் வெற்றிபெற்று வவுனியா பளு தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஞா.ஜீவன் அவர்களுக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீர , வீராங்கனைகள் அதிகம் பளு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

images/content-image/2024/05/1715580176.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!